ஆட்டோமொபைல்
மோட்டார் வாகன தயாரிப்பு கோப்புப்படம்

ஜனவரி மாதத்தில் உள்நாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்தது

Published On 2020-02-13 10:57 GMT   |   Update On 2020-02-13 10:57 GMT
இந்திய சந்தையில் 2020 ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



உள்நாட்டில், ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இருசக்கரம், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 17,39,975- ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,19,253-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை ஏறக்குறைய 14 சதவீதம் குறைந்துள்ளது.

ஜனவரியில் 2,62,714 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,80,091-ஆக இருந்தது. விற்பனை 6.2 சதவீதம் குறைந்து இருக்கிறது. கார்கள் விற்பனை 8 சதவீதம் சரிந்து 1,64,793-ஆக உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரிவடைந்து 75,289- ஆக குறைந்துள்ளது. 

இரு சக்கர வாகனங்கள் விற்பனை 16 சதவீதம் குறைந்து (15,97,528-ல் இருந்து) 13,41,005-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து (10,27,766-ல் இருந்து) 8,71,886- ஆக குறைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 14 சதவீத சரிவை சந்தித்து 4,88,069 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை 6.63 சதவீதம் சரிந்து 3,74,114-ஆக உள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் விற்பனை 29 சதவீதம் குறைந்து 1,63,007-ஆக சரிவடைந்துள்ளது.
Tags:    

Similar News