ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் ஐடி கிராஸ் எலெக்ட்ரிக் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் ஐடி கிராஸ் எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் அறிமுகம்

Published On 2020-02-06 09:01 GMT   |   Update On 2020-02-06 09:01 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் ஐடி கிராஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருக்கிறது.



ஃபோக்ஸ்வேகன் ஐடி கிராஸ் கான்செப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த காரை 2021 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐடி கிராஸ் கார் முழுமையான எலெக்ட்ரிக் கூப் எஸ்.யு.வி. மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெரிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. தற்சமயம் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் உற்பத்தி வடிவம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது.



புதிய எலெக்ட்ரிக் கார் 83 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியும், முன்புறம் 101 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார், பின்புறம் 201 பி.ஹெச்.பி. பவர், 310 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. கான்செப்ட் வெர்ஷனில் 4 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இதன் உற்பத்தி வடிவத்தில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News