ஆட்டோமொபைல்
ஹூண்டாய் டக்சன்

ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

Published On 2020-01-30 10:33 GMT   |   Update On 2020-01-30 10:33 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ்.6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் டக்சன் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

2020 டக்சன் மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியான நிலையில், புதிய புகைப்படங்களில் இந்த கார் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரியவந்திருக்கிறது. இதன் டி.ஆர்.எல்.கள் பம்ப்பரில் உள்ள ஃபாக் லேம்ப் அருகில் பொருத்தப்படுகிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன.



இத்துடன் புதிய மற்றும் அகலமான கிரில் வழங்கப்படுகிறது. 2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பக்கவாட்டில் மெஷின் கட் செய்யப்பட்ட மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லைட் மெல்லியதாகவும் முழுமையான எல்.இ.டி. யூனிட் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் புளூ லிண்க் தொழில்நுட்பம், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, நேவிகேஷன் மற்றும் 3டி மேப்ஸ் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபினில் டூயல் டோன் டேஷ்போர்டு வழங்கப்படுகிறது.

புதிய டக்சன் மாடலிலும் பி.எஸ்.6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 154 பி.ஹெச்.பி. பவர், 192 என்.எம். டார்க் மற்றும் 185 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

புகைப்படம் நன்றி: MotorBeam
Tags:    

Similar News