ஆட்டோமொபைல்
டாடா கிராவிடாஸ்

சோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6

Published On 2019-12-04 11:20 GMT   |   Update On 2019-12-04 11:20 GMT
டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் பி.எஸ்.6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கார் டாடா ஹேரியர் மாடலில் உள்ள பி.எஸ். 6 2.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. ஸ்பை படங்களில் ஓட்டுனருக்கு புல்-அப் போன்ற ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஹெச்7 என அழைக்கப்படும் புதிய கிராவிடாஸ் கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய டாடா ஹேரியர் ஆகும். இந்த எஸ்.யு.வி. மாடல் 2017 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த எஸ்.யு.வி. மாடல் பஸ்ஸார்டு என்ற பெயரில் விற்பனை செய்யப்படலாம்.

ஹேரியர் காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. கிராவிடாஸ் மாடலில் இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.



கிராவிடாஸ் கார் ஹேரியர் மாடலை விட உயரமாக இருக்கிறது. எனினும், இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் மாற்றப்படவில்லை. கிராவிடாஸ் காரின் பின்புறம் பெரிதாக இருக்கிறது. இதனால் இந்த காரில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் மூன்றாம் அடுக்கு இருக்கைகளுக்கும் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வெளியானதும் கிராவிடாஸ் கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆறுபேர் பயணிக்கக்கூடிய எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News