ராசிபலன்

இன்றைய ராசிபலன் 23.11.2025: இவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்

Published On 2025-11-23 05:18 IST   |   Update On 2025-11-23 05:18:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

ரிஷபம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

மிதுனம்

சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் தடைபட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும்.

கடகம்

நன்மைகள் நடைபெறும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.

சிம்மம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயரும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

யோகமான நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

துலாம்

சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் மேல் முதலீடு செய்ய சந்தர்ப்பம் உருவாகும்.

விருச்சிகம்

தெய்வப் பற்று மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

தனுசு

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.

கும்பம்

நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

மீனம்

சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

Tags:    

Similar News