ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 30.07.2025

Published On 2025-07-30 07:33 IST   |   Update On 2025-07-30 07:33:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

பாடு பட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

ரிஷபம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

மிதுனம்

சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடையூறு வரலாம்.

கடகம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்

நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். குடும்பப் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னி

எதிரிகள் விலகும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாகப் பயணம் உண்டு.

துலாம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீண்பழிகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

விருச்சிகம்

திருப்தி வருமானம் தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு

உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மகரம்

புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மருத்துவ செலவுகள் உருவாகலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

கும்பம்

எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மீனம்

யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.

Tags:    

Similar News