ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

Published On 2025-07-06 09:03 IST   |   Update On 2025-07-06 09:04:00 IST

6.7.2025 முதல் 12.7.2025 வரை

அறிவும், ஆற்றலும் பளிச்சிடும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். கடன், நோய், எதிரி, உத்தியோகம் சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்க கூடிய வல்லமை உண்டாகும். தொழில் ஆர்வம் மிகும். பண வரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்கள் சுமூகமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடப் பார்வை உங்கள் மீது விழுந்து பெரும் புகழ் அடைவீர்கள். சனி பகவான் வக்ர கதியில் செல்ல இருப்பதால் அரசியல்வாதிகள் முக்கிய பிரச்சினைகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரித்தாலும் புத்திசாலித்தனமான செயல்பாட்டால் செலவை கட்டுப்படுத்துவீர்கள். சுப மங்கல நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

பூர்வீகச் சொத்து வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். 9.7.2025 அன்று காலை 3.15 மணி முதல் 11.7.2025 அன்று பகல் 12.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கடினமாக உழைக்க நேரும். பவுர்ணமி அன்று மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News