வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
ரிஷபம்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும் ராசியை செவ்வாயும் புதனும் பார்க்கிறார்கள். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும்.
அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக நிலம் சம்பந்தமாக சகோதரருடன் கருத்து வேறுபாடு வரலாம். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். விருப்ப விவாகம் நடைபெறும்.
பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும். புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள். சஷ்டி திதி அன்று முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406