ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

Published On 2025-11-23 10:22 IST   |   Update On 2025-11-23 10:23:00 IST

23.11.2025 முதல் 29.11.2025 வரை

ரிஷபம்

சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் பார்வை உள்ளது. சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மூலமாக அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

அசுப கிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் இனம் புரியாத மனசஞ்சலம் இருக்கும். ஓய்வின்றி உழைக்க நேரும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமா இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.

திருமண வயதினருக்கு வரன்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 25.11.2025 அன்று காலை 4.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News