வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம்.எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும்.
குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406