ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

Published On 2025-10-05 10:39 IST   |   Update On 2025-10-05 10:39:00 IST

5.10.2025 முதல் 11.10.2025 வரை

நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். புதன். சுக்கிரன் பரிவர்த்தனையில் இருப்பதால் சுக்கிரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது. திட்டமிட்டபடி சுப காரியங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தீபாவளி போனசில் அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் நடக்கும். உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். வீடு, வாகனம், சொத்து போன்றவற்றில் ஏற்பட்ட இழப்பு, விரயங்களை ஈடுசெய்வீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும்.

தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள். முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News