ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 8.3.2026 முதல் 14.3.2026 வரை

Published On 2026-03-08 10:21 IST   |   Update On 2026-03-08 10:22:00 IST

ரிஷபம்

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9,10-ம் அதிபதி சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும்.

சேமிப்புகள் உயரும். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். நண்பிகளுடன் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 11.3.2026 அன்று இரவு 10 மணி முதல் 14.3.2026 காலை 9.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும். காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News