சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆவணி மாத ராசிபலன்

Published On 2025-08-18 08:02 IST   |   Update On 2025-08-18 08:03:00 IST

சிம்ம ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இது யோகம்தான். ஆனால் அவரை பார்க்கும் சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் பகைக் கிரகங்கள். எனவே இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பார்ப்புகள் நிறை வேறுவதில் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் கூட்டாளிகளால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். தொழிலில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

கடக - சுக்ரன்

ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியா னவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு, அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். குறிப்பாக கடகத்தில் சஞ்சரிக்கும் புதனோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் தேவைக்கேற்ற பொருளாதாரம் வந்துசேரும். திடீர் மாற்றம் மன வருத்தத்தை உருவாக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.

சிம்ம - புதன்

ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன், உங்கள் ராசி யிலேயே சஞ்சரிக்கும் நேரம் ஒரு உன்னதமான நேரமாகும். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்ப உற வினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வெளிநாடு செல்லும் யோகமும், அதற்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குறிப்பாக வருமானம் உயரும். இந்த நேரத்தில் கடன்சுமை குறைய வழிபிறக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

துலாம் - செவ்வாய்

ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இருந்த குறுக்கீடுகள் விலகும். வாடகை கட்டிடத்தில் உள்ள தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

சிம்ம - சுக்ரன்

ஆவணி 30-ந் தேதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஸ்தம்பித்து நின்ற தொழில் தானாக நடைபெறும். தொழிலை விரிவு செய்ய வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் பிறக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். உத்தி யோகத்தில் உள்ளவர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நன்மையைத் தரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 18, 19, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 11, 12, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Similar News