மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

Published On 2025-06-08 09:40 IST   |   Update On 2025-06-08 09:41:00 IST

08.06.2025 முதல் 14.06.2025 வரை

நன்மைகள் மிகுந்த வாரம். ராசியில் குரு, புதன் சேர்க்கை இருப்பதால் விருப்பங்கள், தேவைகள் நிறைவேறும். பல மாத திண்டாட்டம் விலகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள். வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயமான பலன் உண்டு. புதிய கூட்டுத்தொழில் துவங்க உகந்த காலம். உடல் நலக்குறைபாடுகள் அகலும்.

பூர்வீகச் சொத்துக் குழப்பம் அகலும். வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவு வரும். தந்தை, உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். வெளித் தொடர்புகள் மூலம் சீரான பண வரவு இருக்கும். தோல் வியாதி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.

மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் தேடி வரும். புதிய மனையில் வீடு கட்டும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 14.6.2025 அன்று அதிகாலை 5.38-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. நவகிரக புதனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News