மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

Published On 2025-11-30 10:22 IST   |   Update On 2025-11-30 10:23:00 IST

30.11.2025 முதல் 6.12.2025 வரை

மிதுனம்

மறைமுக எதிர்ப்புகள் குறையும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீகத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறியாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.

முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News