வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை
7.12.2025 முதல் 13.12.2025 வரை
மிதுனம்
நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு செவ்வாயின் நேரடி பார்வை உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயல்வீர்கள். பொருளா தாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். வீடு கட்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் நிலவிய மன உளைச்சல் அகலும்.
தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். விரும்பிய வரன் தேடி வரும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். குல தெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406