மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை

Published On 2025-12-21 09:46 IST   |   Update On 2025-12-21 09:46:00 IST

21.12.2025 முதல் 27.12.2025 வரை

மிதுனம்

அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் சுக்ரன் குரு சம்பந்தம் உள்ளது. தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சாலும் செயலாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும்.

தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர் பார்க்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். வேலை தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வயோதிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். 22.12.2025 அன்று காலை 10.07 முதல் 24.12.2025 அன்று இரவு 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் விரய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. நவகிரக புத பகவானை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News