கடகம் - வார பலன்கள்
null

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-05-15 10:30 IST   |   Update On 2023-05-15 10:41:00 IST

15.5.2023 முதல் 21.5.2023 வரை

சங்கடங்கள் விலகும் வாரம். 5,10-ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் ஊர் மாற்றம்,வேலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். காதல் பாதகமாகும்.

தனஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானம் செல்வதால் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். சிலருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாக முடியும். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அமாவாசையன்று புனித நதிகளில் நீராடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News