கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

Published On 2025-07-27 10:34 IST   |   Update On 2025-07-27 10:34:00 IST

27.7.2025 முதல் 2.8.2025 வரை

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசியில் தன ஸ்தானாதிபதி சூரியன் சகாய ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை செய்து முடிக்கும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும்.

சிறு தொழில் வியாபாரிகளுக்கு தேவையான வங்கிக் கடன் கிடைத்துத் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும்.

திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். இரக்க குணத்தால் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஓரிரு வாரங்களில் விரயங்கள் குறையும். நாக சதுர்த்தி அன்று சர்ப்ப சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News