கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 8.3.2026 முதல் 14.3.2026 வரை

Published On 2026-03-08 10:23 IST   |   Update On 2026-03-08 10:24:00 IST

கடகம்

கடமையில் கவனமாக செயல்பட வேண்டிய வாரம். கடக ராசிக்கு 4,11ம் அதிபதியான சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் உச்சமடைகிறார். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். காலிமனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. சிலர் உயர் கல்விக்காக, வேலைகாக வெளியூர், வெளிநாடு செல்வர்.

பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சியில் நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும். எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து இணைவார்கள். விநாயகர் வழிபாட்டால் காரிய சித்தி அடைய முடியும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News