கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

Published On 2025-05-04 10:19 IST   |   Update On 2025-05-04 10:20:00 IST

4.5.2025 முதல் 10.5.2025 வரை

சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியை ராகு பகவான் நெருங்கிக் கொண்டு இருக்கிறார். இன்னும் வெகு சில நாட்களில் ஜென்ம ராகுவாக பலன் தருவார். உங்களின் மேல் அக்கறை, மதிப்பு, மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கிய சந்தர்ப்பமாக இந்த ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். சிலர் மனமாற்றத்திற்கு குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம்.

வேலைப்பளு மிகுதியாகும். தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். 8.5.2025 அன்று நள்ளிரவு 12.57 மணி முதல் 10.5.2025 பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்தனையிலும், செயலிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இந்த நாட்களில் உங்கள் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அபிராமி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News