கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை

Published On 2025-11-09 10:46 IST   |   Update On 2025-11-09 10:47:00 IST

9.11.2025 முதல் 15.11.2025 வரை

கும்பம்

தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது. கும்பத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் ராசியை பார்ப்பது சுபமான பலன் அல்ல. கோபுர கலசம் போல உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு இது சவாலான காலமாகும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம்.

சிலருக்கு பரம்பரை நோய்களான சுகர், பிரஷர், கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் அதிகமாகும். பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். 15.11.2025 அன்று அதிகாலை 3.51 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல்வாழ்க்கையில் பற்று குறையும். தினமும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News