கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

Published On 2026-01-11 11:13 IST   |   Update On 2026-01-11 11:14:00 IST

11.1.2026 முதல் 17.1.2026 வரை

கும்பம்

நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். குலத் தொழில் செழித்து வளரும்.ராசியில் ராகு இருப்பதால் சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள். சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.

லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும்.விவாகரத்து வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும்.11.1.2026 அன்று அதிகாலை 4.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மந்தாரை மலர்களால் நவகிரக ராகு பகவானை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News