கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

Published On 2025-12-07 10:18 IST   |   Update On 2025-12-07 10:19:00 IST

7.12.2025 முதல் 13.12.2025 வரை

கும்பம்

நன்மையும், மேன்மையும் உண்டாகும். வாரம். ராசியில் உள்ள ராகுவுக்கு குருவின் வக்கிர பார்வை உள்ளது. தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்ம ராகுவால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம். சில தம்பதிகள் குறுகிய காலம் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.

சிலரின் காதல் தோல்வியில் முடியும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். 12.12.2025 அன்று பகல் 10.20-க்கு சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News