கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை

Published On 2025-11-16 10:27 IST   |   Update On 2025-11-16 10:28:00 IST

16.11.2025 முதல் 22.11.2025 வரை

கும்பம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். தன, லாப அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் வக்ர கதியில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சில நேரங்களில் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். வாழ்க்கையை பாதிக்கும் புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்மை தரும்.

எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டத்தை செயல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு வரும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை தங்களுக்குள்ளே தீர்த்து கொள்தல் நலம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.17.11.2025 அன்று மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிவ வழிபாடு செய்யவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News