கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

Published On 2025-06-08 09:49 IST   |   Update On 2025-06-08 09:49:00 IST

08.06.2025 முதல் 14.06.2025 வரை

நிம்மதியான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. குடும்பத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும். அரசின் சட்ட திட்டத்தால் ஏற்பட்ட தொழில் இடர்கள் அகலும். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கே வேலை மாற்றம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் விசயத்தில் நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும்.

உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வீர்கள். அதிகாரமான தெளிவான பேச்சால் தனத்தை பெருக்குவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும்.

பெயர், புகழ் அந்தஸ்தை உயர்த்தும் கெளரவம் பதவி உண்டு. நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க ஏற்ற வாரம். இந்த வாரம் திருமணம் நிச்சயமாகிவிடும். வீட்டில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் குறையும். அரசியல் மற்றும் பொது ஜன தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். சனிக்கிழமை சனி பகவானை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News