ஆன்மிக களஞ்சியம்

வரலாற்று சிறப்பு மிகுந்த திருக்கழுக்குன்றம்

Published On 2023-09-29 12:10 GMT   |   Update On 2023-09-29 12:10 GMT
  • இத்தலத்திலிருந்து 9km தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.
  • மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள பழமைமிக்க சிவதலங்களுள் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்று.

இத்தலம் சென்னையில் இருந்து 45 மைல் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 9 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்தலத்திலிருந்து ஒன்பது 9 தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.

கழுகு குன்றம் என்பது கழுக்குன்றம் என்று இப்போது மருவி அழைக்கப்பட்டு வருகின்றது.

கழுகுகள் இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம் இது.

இதன் காரணமாகவே இத்தலத்திற்கு இப்பெயர் அமைந்தது.

இதன் காரணமாக இத்தலத்திற்கு பட்சி தலம் என்னும் பெயரும் உண்டு.

மற்றும் இத்தலத்திற்கு உலகளந்த சோழபுரம், வேதகிரி, தட்சிண கைலாசம், ருத்திராகோடி என்னும் பெயர்களும் உண்டு.

கழுகுகள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்துப் பேறுபெற்ற உண்மையை இன்றும் அடிக்கடி நேரில் கண்டு அறியலாம்.

இரண்டு கழுகுகள் ஒவ்வொரு நாளும் பகல் 11 மணிக்குள் இத்தலத்து மலையின் கோபுரத்தை சுற்றிவந்து செல்வதை பார்க்க முடியும்.

இக்காட்சியை இத்தலத்திலன்றி வேறு எத்தலத்திலும் காண இயலாது.

வடநாட்டை சேர்ந்தவர்கள் இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்று கூறிப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

இத்தலத்து மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News