ஆன்மிக களஞ்சியம்

திருமணம் கைகூட செய்யும் வழிபாடு

Published On 2024-02-15 12:38 GMT   |   Update On 2024-02-15 12:38 GMT
  • இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
  • இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திருமணம் கைகூட செய்யும் சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.

இது அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண கோலமாக கருதப்படுகிறது.

திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சன்னதிக்கு வந்து மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

சுவாமிக்கும், அம்பாளுக்கும் வேஷ்டி புடவை சாத்தி வழிபாடு செய்வது நல்லது.

யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது நட்சத்திர தினத்தன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

வழிபாட்டுக்கு வரும் போது 3 மாலைகளை வாங்கி வர வேண்டும்.

கோவில் அர்ச்சகர் சொல்வதற்கு ஏற்ப அந்த மாலைகளை பயன்படுத்தி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதன்பிறகு திருமண வயதில் இருப்பவர் தங்களுக்கு எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

சுவாமிக்கு கல்கண்டு, முந்திரி, திராட்சை ஆகியவை வாங்கி வந்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பிறகு அதை அங்குள்ள பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.

இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

Tags:    

Similar News