ஆன்மிக களஞ்சியம்
null

திருமண வரம் தரும் தியாகராஜர்

Published On 2023-08-30 12:25 GMT   |   Update On 2023-08-30 12:54 GMT
  • இங்கு முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.
  • இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் திருமண வரம் கைகூடும்.

திருமண வரம் தரும் தியாகராஜர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும்.

அவ்வளவு பெரிய கோவில்.

திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

திருவாரூரில் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என முப்பெருந்தேவியர்கள் திருவருள் புரிகிறார்கள்.

மூலவர் வன்மீகநாதர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள்.

கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.

இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியன நிறைவேறும்.

அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.

நீலோத்பலாம்பாளை வழிபட்டு அர்த்த ஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

ருண விமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.

மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும்.

அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.

பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.

நாகதோஷம் உள்ளவர்கள் குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதியில் வழிபடுகின்றனர்.

Tags:    

Similar News