ஆன்மிக களஞ்சியம்

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்?

Published On 2024-01-10 11:12 GMT   |   Update On 2024-01-10 11:12 GMT
  • தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.
  • சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.

உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள்.

பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.

தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது.

பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

இதனால்தான் பொங்கல் பண்டிகை "உழவர் திருநாள்" என கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

Tags:    

Similar News