ஆன்மிக களஞ்சியம்

சிவ பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்

Published On 2024-06-16 15:44 IST   |   Update On 2024-06-16 15:44:00 IST
  • சிவராத்திரி தினத்தன்று சிவாலயங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும்.
  • வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

சென்னையில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன.

அவற்றுள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை திருமயிலை எனப்படும் மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பெற்றுள்ளன.

மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், பலன்களையும் தரும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 6 சிவாலயங்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரிசையில் வந்து வழிபாடு நடத்த வசதி செய்யப்படும்.

இரவு முழுக்க தங்கி இருக்கும் போது தேவைப்படும் குடிநீர் வசதி உள்பட எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

சிவராத்திரி தினத்தன்று சிவாலயங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும்.

வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

அன்னதானம் செய்ய இயலாதவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இரவு கண் விழித்திருக்கும் பக்தர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் கொடுத்து உபசரிக்கலாம்.

இதற்காக சிவாலய நிர்வாக அதிகாரிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.

சிவ பக்தர்களுக்கு செய்யும் உதவியானது, மிக எளிதாக சிவன் அருளைப் பெற்றுத்தரும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News