ஆன்மிக களஞ்சியம்

சித்திரையில் மட்டும் பூ பூக்கும் அதிசயம்

Published On 2024-02-15 18:10 IST   |   Update On 2024-02-15 18:10:00 IST
  • சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.
  • இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது நடந்து வருகிறது.

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் எத்தனையோ விசேஷங்களையும், வித்தியாசங்களையும் உள்ளடக்கியது.

நிறைய அபூர்வ தகவல்கள் இந்த தலத்தில் இருந்து மறைந்து போய் விட்டன.

சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.

சித்திரை மாதம் இந்த கொன்றையடி சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தை கட்டிய திரிநேந்திர முனிவரிடம் சிவபெருமான் காட்சி கொடுத்து, "எமக்கு ஆலயம் எழுப்பிய உமக்கு என்ன வரம் வேண்டும் கேளும்" என்று கேட்டார்.

அதற்கு அந்த முனிவர், "திரிபுரத்தை சம்காரம் சென்ற போது நீங்கள் ரதம் ஏறி சென்றீர்கள்.

திரிபுரத்தை எரித்து விட்டு நீங்கள் ரதத்தில் இருந்து இறங்கும் காட்சி கண்கொள்ளா காட்சி.

அப்படி நீங்கள் ரதம் இறங்கி செல்லும் காட்சியை எனக்கு காண்பிக்க வேண்டும்" என்றார்.

அதை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் முனிவருக்காக ரதத்தில் வந்து இறங்குவது போன்று காட்சி கொடுத்து அருளினார்.

அதை பிரதிபலிப்பது போல இந்த ஆலயத்தில் சித்திரை பிரமோற்சவத்தின் போது 7வது நாள் முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பொதுவாக கொன்றை மரங்கள் தை மாதம் முடிந்து மாசியில் பூக்க தொடங்கும்.

ஆனால் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் இருக்கும் கொன்றை மரம் மாசி மாதம் பூக்காது.

சித்திரை மாதம் பிரமோற்சவம் நடக்கும் நாளில் மட்டுமே பூக்கும்.

இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது அற்புதமான ஒன்றாக நடந்து வருகிறது.

வேறு எந்த சிவாலயத்திலும் இந்த அற்புதத்தை காண முடியாது.

Tags:    

Similar News