ஆன்மிக களஞ்சியம்

சாய்பாபா பயன்படுத்திய பொருட்கள்

Published On 2023-11-29 18:08 IST   |   Update On 2023-11-29 18:08:00 IST
  • அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.
  • இந்நெருப்பில் இருந்து வரும் சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது.

பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார்.

அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.

அதனைக் கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள்.

கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில் தான் போட்டு வைத்தார்.

அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.

சாயிபாபா மூன்று வழக்கங்களைக் கடைபிடித்தார்.

திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல்,

பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.

அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் "துனி" எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார்.

இந்நெருப்பில் இருந்து வரும் சாம்பல் "உதி" என்று அழைக்கப்பட்டது.

அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News