ஆன்மிக களஞ்சியம்
null

நினைத்தாலே கங்கையில் நீராடிய பலனை தரும் சிவகங்கை தீர்த்தம்

Published On 2023-10-09 12:16 GMT   |   Update On 2023-10-17 10:19 GMT
  • இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் "சக்கர தீர்த்தம்" அமைந்துள்ளது.
  • அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் "சிவகங்கை தீர்த்தம்" அமைந்துள்ளது.

இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன் உண்டாகும்.

அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் "சக்கர தீர்த்தம்" அமைந்துள்ளது.

திருமால் "வராக" அவதாரம் எடுத்த போது, இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் நீராடியவர்களும், இந்த தீர்த்தத்தை உட்கொண்டவர்களும்,

துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் இடமாகப் பெறுவார்கள்.

மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும்.

இந்த தீர்த்தத்தில் நீராடி, ஓர் அணு அளவு தங்கத்தை தானம் செய்கிறவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

ராஜகோபுரத்திற்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது, சிவாஞ்சி தீர்த்தம்.

இந்த தீர்த்தத்தில் குளித்தாலும், அல்லது தண்ணீரை எடுத்து தன் தலையில் தெளித்துக்கொண்டாலும், நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும்.

சிவன் நல்ல வழி காட்டுவார்.

இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் உள்ளது என வரலாறு கூறுகிறது.

Tags:    

Similar News