ஆன்மிக களஞ்சியம்

நவகயிலாய கோவில்கள்

Published On 2023-12-08 12:02 GMT   |   Update On 2023-12-08 12:02 GMT
  • நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.
  • நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.

நவகயிலாயங்கள் அமைந்துள்ள கோவில்களைப் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.

இங்குள்ள பாவநாதர் கோவில் மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர்.

அம்பாள் உலகாம்பிகை.

நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரிய தலமாக விளங்குகிறது.

நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.

இங்குள்ள சிவன் கோவிலின் மூலவர் அம்மநாதர். அம்பாள் ஆவுடைநாயகி.

இத்தலம் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சந்திர தலமாகும்.

கோடகநல்லூர் மூன்றாவது நவ கயிலாயமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் கைலாசநாதர்.

இறைவி சிவகாமி அம்பாள், நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது கோடகநல்லூர்.

இது செவ்வாய் தலமாக விளங்குகிறது.

நவ கைலாயங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது குன்னத்தூர்.

இங்குள்ள சிவன் கோவில் மூலவர் கோதபரமேஸ்வரர். அம்பாள் சிவகாமி அம்மாள்.

நெல்லை பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இது ராகு தலமாகப் போற்றப்படுகிறது.

நவ கயிலாயத்தின் ஐந்தாவது தலம் முறப்பநாடு.

இங்குள்ள கைலாசநாதர் கோவிலின் மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது குரு தலமாக விளங்குகிறது.

நவ கயிலாயங்களில் ஆறாவது தலம் ஸ்ரீவைகுண்டம்.

இது பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.

குமரகுருபரர் அவதரித்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சனி தலமாகும்.

தென்திருப்பேரை நவகயிலாயங்களில் ஏழாவது தலமாகும்.

இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.

இறைவி சிவகாமி அம்பாள்.

அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு.

நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது புதன் தலமாக விளங்குகிறது.

நவ கயிலாயங்களில் எட்டாவது கைலாயம் ராஜபதி.

இங்கிருந்த கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது.

முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது.

அதுதான் இக்கோவிலில் இருந்தததாக கூறப்படும் நந்தி, தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

இது கேது தலமாகும்.

நவ கயிலாயங்களில் ஒன்பதாவது தலம் சேர்ந்தமங்கலம்.

இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.

அம்பாள் சிவகாமி அம்மை.

இத்தலத்தில்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது.

நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது.

இது சுக்கிரன் தலமாக விளங்குகிறது.

Tags:    

Similar News