ஆன்மிக களஞ்சியம்

கருவறை ஆன குறிமேடை

Published On 2024-04-18 11:32 GMT   |   Update On 2024-04-18 11:32 GMT
  • அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.
  • அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

மறுநாளே, செட்டியார் வண்ணையம்பதிக்குச் சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழனி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார்.

அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.

பின்னர் சில நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்துச் செட்டியாரே அண்ணாசாமித் தம்பிரானின் திருவுள்ளக்குறிப்பின்படி, கோவில்

திருப்பணியை முன்நின்று தொடங்கினார்.

குறிமேடை அருகில், இப்போது வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல் சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது.

அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

இது சுமார் கி.பி.1865-ம் ஆண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் ஆவணிமாதம் அமாவாசைத் திதி மகநட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்து விட்டார். அன்பர்கள் பெரிதும் வருந்தினர்.

அப்போது தான் ரத்தினசாமிச் செட்டியாருக்குத் தம்பிரான், ஏன் தம்மை இங்கேயே இருந்து கொண்டு, தொண்டு செய்து வரும்படி விரும்பிப் பணித்தார் எனும் குறிப்பும் நுட்பமும் தெரிந்தன.

தம்பிரானின் திருமேனியை உரிய முறையில் பூசித்துக் குறிமேடை அருகில் சிறப்பாக அடக்கம் செய்தார், ரத்தினசாமிச் செட்டியார்.

Tags:    

Similar News