ஆன்மிக களஞ்சியம்

அய்யப்பன் என்ற திருநாமம் எதற்கு?

Published On 2023-11-17 10:57 GMT   |   Update On 2023-11-17 10:57 GMT
  • கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால் மணிகண்டன் என்ற திருப் பெயர் உண்டு.
  • அய்யன் என்பதற்கு ‘மிக உயர்ந்தவர்’ என்று பொருள்.

பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில், கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால்

மணிகண்டன் என்ற திருப் பெயர் அவருக்கு உண்டு.

ஆனால் அய்யப்பன் என்ற பெயர் வந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு.

சாஸ்தாவுக்கு அய்யன் என்று பிரசித்திபெற்ற பெயர் உண்டு.

திருமந்திரம் போன்ற பண்டைய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அய்யன் என்பதற்கு 'மிக உயர்ந்தவர்' என்று பொருள்.

இந்த அய்யன் வார்த்தைக்குப் பின்னால் ஆர் என்கிற பதத்தைச் சேர்த்து (அய்யன்+ஆர்) அய்யனார்

என்று தமிழ்நாட்டிலும், அப்பன் என்ற பதத்தைச் சேர்த்து அய்யன்+அப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.

Tags:    

Similar News

கருட வசனம்