ஆன்மிக களஞ்சியம்

சந்திரனால் உண்டாகக்கூடிய யோகங்கள்

Published On 2024-03-28 11:55 GMT   |   Update On 2024-03-28 11:55 GMT
  • சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.
  • சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ் வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

சந்திராதியோகம், சந்திர மங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபா யோகம்.

சந்திராதியோகம்

சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகி ரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ் வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

சகடயோகம்

சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.

அமாவாசை யோகம்

சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடிய வராகவும் இருப்பார்கள்.

மேத்ரும யோகம்

சந்திரனுக்கு முன்னும் பின் னும் கிரகங்கள் இல்லாமல் இருப் பது. இதனால் வாழ்வில் முன் னேற்றமற்ற நிலை உண்டாகும்.

அனபாயோகம்

சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.

சுனபா யோகம்

சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.

சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.

நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

Tags:    

Similar News