ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீசக்ர மஹா மேரு விளக்கம்

Published On 2023-07-16 11:36 IST   |   Update On 2023-07-16 11:36:00 IST
  • மஹா மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள்.
  • 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

அம்பிகையின் அருவுருவ நிலையான மேரு ஸ்ரீசக்ரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

புருஷ ரூப சக்தி 32-ம் சக்தி ரூப பகுதி 32-ம் ஒன்றேடொன்று இணைவதால் 43 முக்கோணமும், பிந்துவும் வெளியில் தெரிகின்றது. மற்ற கோணங்கள் உள்ளே மறைந்து விடுகின்றது.

இந்த 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே பரதக் கலையில் 64 அபிநயமும் இசையில் 64 ராகமும் சிற்ப சாஸ்திரத்தில் 64 பாவமும் தேரின் கால்கள் 64-ம் அம்பிகை அமரும் தாமரை மலரின் 64 இதழ்களும் நம் பெண்டிர் அணியும் திருமாங்கல்யத்தில் 64 துண்டுகள் இணைத்தலும் வழக்கில் உள்ளது.

ரத்தினத்திலும் 64 பட்டை தீட்டப்பட்டதே இதன் அடிப்படையில் ஆகும்.

மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள். மேரு அர்த்த மேரு, மகா மேரு என இரு வகைப்படும்.

அர்த்த மேரு என்றால் பாதி அல்லது அகலத்தில் பாதி உயரமாகக் கொண்டு அமைப்பதாகும்.

இதில் இரு வகையுண்டு. ஒன்று அகலத்தில் பாதி உயரம் வரை 43 முக்கோணங்களையும் படிப்படியாக அமைத்தல், மற்றொன்று அகலத்தில் பாதியளவு உயரம் வரை வைத்து பின் மேற் பகுதியில் ஸ்ரீசக்ரத்தினை வரைவதாகும்.

அகலமும் உயரமும் ஒரே அளவில் அமைந்து விளங்குவது ஸ்ரீமகா மேரு ஆகும். கருணைக் கடலாகிய அன்னையின் அருவுருவமே மேரு ஆகும்.

இதனை முறைப்படி தயாரித்து வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். இகத்தில் சுகமும் பரத்தில் அமைதியும் பெறலாம்.

இத்தகைய பெருமை வாய்க்கப் பெற்ற ஸ்ரீசக்ரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார்.

காஞ்சி காமாட்சியம்மன் பாதத்தில், குற்றாலத்தில் ஸ்ரீசங்கர மடத்தில், ஆவுடையார் கோவில் மூல ஸ்தானத்தில் சென்னை ஸ்ரீகாளிகாம்பாள ஆலய மூல ஸ்தானத்தில் இன்றும் அவைகளைக் காணலாம்.

கிண்ணித் தேர் தவிர, ஸ்ரீஅம்பாள் வெளிப் பிரகார மண்டபத்தில் பிரதட்சணம் வர, 125 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகள் பதித்த வெள்ளி ரதம் அமைக்கப்பட்டு 2.3.1995 அன்று வெள்ளோட்ட விழா செய்யப் பெற்றது.

பக்தர்கள் இன்றளவும் கட்டணம் செலுத்தி, வெள்ளித் தேர் உற்சவம் நடத்தி அம்பாளை வழிபட்டு மகிழ்கின்றனர்.

சீரோங்கு சென்னையில் பாரோங்கும் பலகோவில்

சாரோங்கு காளிக்கோட்டம் கதிர்மதி தொழும்கோட்டம்

ஊரோங்கும் ஒரு கோவில் உயர்விஸ்வகர்மர் கோவில்

தேரோங்கும் ஸ்ரீசக்ரம்திகழ் திருக்காளிகாம்பாள் திருக்கோவில்.

காளிகாம்பாளைத் தொழுதால் கன்னியர் மணம்முடிப்பர்

காளையர் வேலைபெற்று இல்லறம் சிறக்க வாழ்வர்

நூலையும் கற்பர் சிறுவர் நுண்கலை பயிர்வார் சிற்பி

காளிதாளையே பற்றினார்கள் தனியரசாள்வர் தாமே

புவியினில் பிறந்தோர் வாழ புண்ணியச் செயல்கள்தேவை

தவித்திடும் ஏழைகட்கு தண்ணீரை வார்க்க வேண்டும்

பசித்திடும் பாமரர்க்கு பாலன்னம் கொடுக்க வேண்டும்

வலித்திடும் நோயினார்க்கு வளமான வார்த்தை வேண்டும்

இனித்திடும் காளிகாம்பாள் இவையெல்லாம் ஈவாள் வாழ்க!

தனித்திரு மனமே நித்தம் தாய்தினம் நம்மைக் காப்பாள்

பணிந்திடு பரவி வாழ்த்து பதமலர் பற்றிக் கொள்வாய்

கனிந்திடு கல்நெஞ்சத்தை கரைந்துநில்

Tags:    

Similar News