ஆன்மிக களஞ்சியம்

அம்மனின் அருளைத் தரும் கிழமைகள்

Published On 2023-09-25 11:21 GMT   |   Update On 2023-09-25 11:21 GMT
  • நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.
  • நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். இடையூறுகள் யாவும் அகன்றுவிடும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாங்காட்டு அம்மனை வழிபட்டால் வாழ்க்கை ஒளிபெறும்.

மனத்தில் அச்சங்கள் அகன்று, தளர்ச்சி நீங்கி அனைத்து வளங்களும் ஏற்படும். புகழ் உண்டாகும்.

திங்கட்கிழமைகளில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் விலகும்.

உடல் நலம் குறைவுற்றிருந்தால் உடல் நலம் பெறும். உடல் நலமும் நீண்ட ஆயுளும் உண்டாகும்.

மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். சோம வார விரதமிருந்து அம்மனை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும்.

செவ்வாய்க் கிழமைகளில் அன்னை காமாட்சியை வழிபட்டு வந்தால் அமங்கலங்கள் நீங்கி மங்கலம் உண்டாகும்.

நீண்ட காலமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்களின் துயர் நீங்கித் திருமணம் கூடும்.

செவ்வாய் தோஷம் என்பது வேதனைக்குரியது என்பர்.

திருமணத் தடங்கல் அல்லது மணந்து வாழும்போது பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பர்.

அத்தகைய சங்கடங்கள் நேராதவாறு தடுத்து அருள்புரிவாள் அன்னை காமாட்சி.

நோய் நொடிகள், பேய், பிசாசு, மாய மந்திரங்கள் போன்ற தொல்லைகளிலிருந்தும் காத்தருள்வாள்.

புதன் கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் அறிவு விருத்தியாகும்.

கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். அதனால் மேன்மையும் பெறலாம்.

கவிஞர்கள், கலைத்துறையில் ஈடுபட்டவர்கள், ஜோதிடர்கள், வணிகர்கள் போன்றோர் புதன் கிழமைகளில் சென்று பராசக்தியை வழிபட்டு வந்தால் அவர்கள் துறையில் மேம்பட்டு விளங்குவர்.

வியாழக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தொல்லைகள் யாவும் நீங்கி சிறப்புகள் உண்டாகும்.

பொன்னும் பொருளும் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.

நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். எத்தகைய இடையூறு இருந்தாலும் யாவும் அகன்றுவிடும்.

சனிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வம்பு வழக்குகள், விரோதிகளின் தொல்லைகள் போன்ற எல்லாமே நம்மை ஒன்றும் செய்யாது காத்தருள்வாள்.

நீண்ட ஆயுளையும் அளிப்பாள்.

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

சித்திரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற திருவிழாக்கள் மாங்காட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Tags:    

Similar News