ஆன்மிக களஞ்சியம்

முக்கிய நரசிம்மத் தலங்கள்

Published On 2023-07-15 03:39 GMT   |   Update On 2023-07-15 03:39 GMT
  • அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம்.
  • திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி.

அகோபிலம் (சிங்கவேள் குன்றம்):

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. தூரத்தில் நவநரசிம்ம தலம் உள்ளது. இந்த மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது.

அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம்.

வேளுக்கை:

காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம்.

திருவாழித் திருநகரி:

சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.

சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி.

நாகை (நாகப்பட்டினம்):

நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது.

தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை):

தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.

தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி.

திருக்கோஷ்டியூர்:

(தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.

மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.

மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள்.

Tags:    

Similar News