ஆன்மிக களஞ்சியம்

ஆடி பவுர்ணமி

Published On 2023-10-03 10:49 GMT   |   Update On 2023-10-03 10:49 GMT
  • அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.
  • ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

திருநெல்வேலி காந்திமதியம்மை ஆடித்தபசு, குரு பூர்ணிமா என்ற குரு பூஜை, ஹயக்ரீவ அவதார தினம் ஆகியவை இந்த நாளில் அமைகின்றன.

ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை உமைக்குக் கொடுத்து காட்சி அளித்த கோலம் அர்த்தநாரி உருவம் (திருச்செங்கோட்டு மூலவர்).

ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்து காட்சி தந்த திருக்கோலம் சங்கர நாராயணர் கோலம் (திருநெல்வேலி).

ஆடித் தபசு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று.

அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.

அதற்கு ஈசன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார்.

அம்மையும் ஊசிமுனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரத்தில்

பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் ஒரு பாகனாக காட்சியளித்தார்.

ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

இந்த ஆடிப் பவுர்ணமி அன்று திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது.

அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

இவர் கல்விக்குரிய கடவுள்.

இவர் வழிபாடு தொன்மையானது.

இவரின் திருவுருவை புதுவை முத்தியால் பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம்.

படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர்.

Tags:    

Similar News