ஆன்மிக களஞ்சியம்

நாகேஸ்வரர் கோவில்

நாகேஸ்வரர் கோவில்

Published On 2023-05-15 11:58 GMT   |   Update On 2023-05-15 11:58 GMT
  • நாகநாதர் கோவில் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
  • இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.

நாகேஸ்வரர் கோவில் அல்லது நாகநாதர் கோவில் என்று அழைக்கப்படும் கோவில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.

புராணக் கதை

சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவபக்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர். அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்கும் முன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்கு நாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.

Tags:    

Similar News