ஆன்மிக களஞ்சியம்

மகாகாலேஸ்வரர் கோவில்

Published On 2023-05-15 11:15 GMT   |   Update On 2023-05-15 11:15 GMT
  • ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.
  • மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது. மகாகாலேஸ்வரர் கோவிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே கணேசர், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர்.

தென்புறம் நந்தி சிலை உண்டு. மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக்கோவில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News