என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வழிமறித்த பிரம்மராட்சத பூதத்திடம் சத்தியம் செய்த நம்பாடுவான்
    X

    வழிமறித்த பிரம்மராட்சத பூதத்திடம் சத்தியம் செய்த நம்பாடுவான்

    • எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.
    • ஆனால் நான் சென்று பெருமானைத் துதித்து விட்டு வருகிறேன் என்றார். அதை கேட்டு பூதம் சிரித்தது.

    அன்று கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி. வழக்கம் போல நம்பாடுவான் புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழி அடர்த்தியான காடு.

    அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பூதம்.

    "நல்லவேளை! வந்தாயா? என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று" என்று சொல்லி, நெருங்கியது.

    பயம்தரக்கூடிய அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான்.

    இன்று நம்மால் பாடித் துதிக்கமுடியாமல் போகிறதே என்றுதான் கலங்கினார். அதை வாய்விட்டு சொன்னார்.

    உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும்.

    எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.

    ஆனால் நான் சென்று பெருமானைத் துதித்து விட்டு வருகிறேன் என்றார்.

    அதை கேட்டு பூதம் சிரித்தது.

    நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக சொல்லும் பொய் இது.

    உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது.

    அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான்.

    உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன்.

    அப்படி வராமல் போனால் நரகத்தில் உழலும்படியான பதினெட்டு வகையான பாவங்கள் என்னை வந்து சேரட்டும் என்றார்.

    இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராட்சத் பூதம் அவனை ஆலயம் செல்ல அனுமதித்தது.

    Next Story
    ×