search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வறுமையிலிருந்து விடுபட சொர்ணா கர்ஷண பைரவ வழிபாடு
    X

    வறுமையிலிருந்து விடுபட சொர்ணா கர்ஷண பைரவ வழிபாடு

    • பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.
    • பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணா கர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி

    வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு

    பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

    வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

    ஸ்வர்ணகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.

    நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம்.

    ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

    கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

    சித்திரை - பரணி, ஐப்பசி - பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும்.

    ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

    எனவே பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.

    தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.

    Next Story
    ×