search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாரூர் தேர்
    X

    திருவாரூர் தேர்

    • சிதம்பர ரகசியம் போல இங்குள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
    • தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகும்.

    திருவாரூர் தேர்

    கமலாம்பிகை திருக்கோவில் மூன்றாவது பிரகாரத்தில் எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.

    அம்பாள் கோவிலின் மேற்கு மூலையில் அட்சர பீடமுள்ளது.

    இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன.

    நின்று தியானித்துச் செல்லவேண்டும்.

    தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகும்.

    சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது.

    எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார்.

    எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

    திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது நல்லது.

    சிதம்பர ரகசியம் போல தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.

    ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை நித்ய பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

    Next Story
    ×