search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஓம்கார வடிவானவன்
    X

    ஓம்கார வடிவானவன்

    • ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.
    • அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன்,

    ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது.

    இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

    கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.

    பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார்.

    ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப்

    புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.

    ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    Next Story
    ×