search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாடி வந்தவர்களின் நோய்களை தீர்த்த பாபா
    X

    நாடி வந்தவர்களின் நோய்களை தீர்த்த பாபா

    • தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.
    • ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.

    ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக் கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.

    பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.

    தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.

    சிரிக்க சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.

    பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார்.

    பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார்.

    சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.

    ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா.

    ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.

    தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார்.

    அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.

    பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார்.

    பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார்.

    பாபா மதங்களைக் கடந்து நின்றார்.

    துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.

    மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார்.

    பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை) வும், ஸபூரி (பொறுமை)யும் ஆகும்.

    தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி(விபூதி) யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.

    வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்.

    Next Story
    ×