search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசி விரத உணவு முறை
    X

    ஏகாதசி விரத உணவு முறை

    • பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
    • ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும்.

    பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    Next Story
    ×